26 செப்டம்பர், 2011

வாகனக் காப்பீட்டில் கவனிக்கவேண்டியவை

வாகனக் காப்பீட்டில் கவனிக்கவேண்டியவை 

வாகன  காப்பீட்டு ஒப்பந்தம்  ஒரு வருடத்திற்கு மட்டும் தான். வருடா  வருடம் நாம் வாகன காப்பீடு எடுக்க வேண்டும். நம் வசதி , விருப்புகேற்ப  அது,  எந்த காப்பீட்டு நிறுவனத்துடனும் இருக்கலாம். பொதுவாக, முகவர்கள் போட்டி போட்டு கொண்டு வெவ்வேறு விலை சொல்வார்கள். நாமும் குறைந்த விலை சொன்ன நிறுவனத்தில் காப்பீடு எடுப்போம். நுகர்வோர்களே, ஒரு நிமிடம். நீங்கள் கவனிக்க வேண்டிய விழயம் நிறைய இருக்கிறது.

1. வண்டியின் தற்போதைய மதிப்பு ( Insured Declared Value - IDV)

இந்த தொகையை பொருத்தே காப்பீட்டு கட்டணம் மாறும். பல முகவர்கள் உங்கள் வாகன மதிப்பை குறைத்து, காப்பீட்டு கட்டணத்தை குறைப்பார்கள். கவனம் தேவை . IDV தான் உங்களின் அதிகபட்ச இழப்பீடு தொகை. 

உதாரணமாக, உங்கள் வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 5,00,000/- என்று வைத்து கொள்வோம்.  அதை குறைத்து 3,00,000 என்று  மதிப்பிட்டு காப்பீடு எடுத்தால், பெரும்  விபத்து , வாகனம்  களவு போனால் அதிக பட்சம் 3,00,௦௦௦000 மட்டுமே இழப்பீடு கிடைக்கும். மேலும் சிறிய விபத்து நேர்ந்தால்  இழப்பீடு தொகையும் குறையும். எனவே வண்டியின் தற்போதைய மதிப்பிற்கே இழப்பீடு தொகை எடுக்க வேண்டியது அவசியம். ஒப்பிட்டு பார்க்கும் போது IDV மதிப்பை கருத்தில் கொள்ளவும்.

2. NO CLAIM BONUS (NCB)
நாம் முந்தய வருடங்களில் இழப்பீடு கோராமல் இருந்தால், சலுகையாக காப்பீட்டு நிறுவன, ஒழுங்குமுறை ஆணையம் (Insurance Regulatory and Development Authority - IRDA) முன்வரையறுக்கப்பட்ட பொது அட்டவணையின் படி, Own Demage (OD) காப்பீட்டு தொகையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். கிடையாது 

Continious Claim Free Year NCB allowed
  • New Vehicle or Any claim Previous Year
  • 0%
  • 1 வருட தொடர்ச்சியான இழப்பீடு கோராமல் இருந்தால்
  • 20%
  • 2  வருடங்கள் தொடர்ச்சியான இழப்பீடு கோராமல் இருந்தால்
  • 25%
  • 3  வருடங்கள் தொடர்ச்சியான இழப்பீடு கோராமல் இருந்தால்
  • 35%
  • 4  வருடங்கள் தொடர்ச்சியான இழப்பீடு கோராமல் இருந்தால்
  • 45%
  • 5+  வருடங்கள் தொடர்ச்சியான இழப்பீடு கோராமல் இருந்தால்
  • 50%


ஒவ்வொரு  வருடமும் நம் வசதிக்கேற்ப எந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். முந்திய  ஒப்பந்தத்தில்  குறிப்பிட்ட NCB  ஐ அடிப்படையாக கொண்டு, அடுத்த கட்ட NCB கணக்கிடப்படும். இது  கண்டிப்பாக தர வேண்டும். 

சில பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலும் NCB குறிப்பிட படுவதில்லை. வேறு நிறுவனங்களுக்கு செல்லும் போது அடுத்த கட்ட NCB கிடைப்பது இல்லை. NCB உங்கள் உரிமை. எனவே காப்பீட்டு ஒப்பந்தத்தில் NCB சரியாக குறிப்பிட பட்டுள்ளதா என பார்க்கவும்.

அடி குறிப்பு:

நீங்கள் வாகனம் விற்கும் போது, உங்கள் காப்பீடு ஒப்பந்தத்தில் உள்ள NCB ஐ நீங்கள் உங்கள் புதியதாக வாகனம் வாங்கும் போது மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை வாகனம் விற்ற நகலுடன் 60 நாட்களுக்குள் அணுக வேண்டும். இந்த சான்றின்  செல்லுபடியாகும் காலப்பகுதி 2 வருடங்கள். 


3. இழப்பீட்டுத்தொகையில் பிடித்தம்:- (Deductable )

உதாரணமாக உங்கள் வாகனத்திற்கு பல நிறுவனத்திடமிருந்து இன்சூரன்ஸ் தொகையை கோரும்போது  எல்லா நிறுவனங்களும் IDV, NCB வகையராகளை ஒன்றாக காண்பித்தாலும்,  ஒரு சில கம்பெனிகள் குறைந்த தொகையை ஒரு சில உத்திகள் /சூழ்ச்சி முறையில் கோரலாம். எப்படி? 

ஒவ்வொரு காப்பீட்டிலும்  ஒரு குறைந்த பட்ச தொகையை, ஒவ்வொரு இழப்பீடு கோரும் போதும், இழப்பீட்டு தொகையில் பிடித்தம்செய்து தான் கொடுப்பார்கள். இதற்கு பெயர்   இழப்பீட்டு பிடித்த தொகை (Detectable). தேவை இல்லாமல் இழப்பீடு கோருவதை தடுக்கவே இந்த முறை கையாளபடுகிறது.

 இழப்பீட்டு பிடித்த தொகையை (Detectable) பிடித்தம்  அதிகரித்து, காப்பீடிர்கான தொகையை குறைத்து ( Insurance Premium) கூறுவார்கள். உதாரணமாக ரூ.5,00,000 மதிப்புள்ள வாகனத்திற்கு ஒரு நிறுவனம்,  இழப்பீடு பிடித்தமாக ரூ. 500 என்றும்,  மற்றொரு நிறுவனம் அந்த பிடித்த தொகையை ரூ. 5000 அல்லது இழப்பீட்டில் 5% (எது அதிகமோ அத்தொகை ) என  கொடுத்து,  premium குறைத்து கொடுத்திருக்கலாம். நாம் இழப்பீடு கோரும் ஒவ்வொருமுறையும் அந்த நிறுவனம் கணக்கிடும் இழப்பீட்டுத் தொகையில் இருந்து காப்பீட்டில் குறிப்பிட்டுள்ள பிடித்த தொகையை கழித்துக் கொண்டு தான் கொடுக்கும். எனவே குறைந்த பட்ச இழப்பீட்டு பிடித்த தொகை கொண்ட காப்பீடு தான் நுகர்வோருக்கு சிறந்தது.

(உ - ம் ) மேற்குறிப்பிட்ட வாகனங்கள் 2 முறை விபத்து  ஏற்பட்டு முதல் முறை ரூ. 4,500/- செலவாகிறது; இரண்டாம்முறை 2,30,000/- லட்சம் செலவாகிறது என்று வைத்து கொள்வோம் .இதில் உங்களுடைய இன்சூரன்ஸ் இழப்பீடு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

                                எது சிறந்தது?


Vehicle
வாகன மதிப்பு (IDV)
இழப்பீட்டு பிடித்த தொகை(Deductible)
காப்பீட்டு தொகை (Insurance Premium)
இழப்பீடு
ரூ. 4,500/-
இழப்பீடு
ரூ. 2,30,000/-
A
5,00,000
5,000 or 5% (எது அதிகமோ அது)
22,700
இழப்பீடு கிடையாது
2,18,500
B
5,00,000
500
22,700
4,000
2,29,500
C
3,00,000
500
14,582
3,000
2,29,500 (வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்)
மேலே உள்ள அட்டவணை நிறுவனங்களின் தனிப்பட்ட வணிக கழிவு இல்லாமல் தயாரிக்க பட்டவை.





அடி குறிப்பு:

 காப்பீட்டு ஒப்பந்த விதிகளின்படி முழுமையாக சேதம் அடைந்தாலோ, காணமல் போனாலோ இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்ட வாகனத்தின்  பழைய பாகங்களோ/ சேதம் அடைந்த பொருட்களோ  காப்பீட்டு நிறுவனங்களுக்கு சொந்தம்.


4.   உரிமையாளரின் தகவல் :- (Owner Information)

எந்த ஒரு இழப்பீடு கோரும்போது காப்பீட்டில் குறிப்பிட்டுள்ள வாகன உரிமையாளரும்,   வாகன உரிமையாளர் பத்திரத்தில்(Registration Certificate - RC) உள்ள உரிமையாளரும் ஒன்றாக இருக்க வேண்டும் . இரு சக்கர வாகனம் முதல் அனைத்தையும் கடனில் வாங்கும் பழக்கும் அதிகரித்து கொண்டே வருகிறது. தான்இழப்பீட்டு தொகை சென்றடையும். R.C.Copy தவணை அல்லது கடனில் வாகனத்தை வாங்கும் போது வாகன உரிமையாளர் பத்திரத்தில் அடைமானம்/ ஒற்றி தகவல் பதிக்கப்படும். அநேகம் பேர் கடனை அடைத்த பிறகும் தடையில்லா  சான்றிதழ்( No Objection Certificate - N.O.C.) பெறுவதில்லை. மற்றும் சிலர் உபயோகப்படுத்திய வாகனங்களில் மற்றவரிடம் விலைக்கு வாங்கிய பிறகும்   R.C , மற்றும் இன்சுரன்ஸ் பத்திரங்களில் பெயர் மாற்றம் செய்வதில்லை. இழப்பீடுத் தொகை கோரும்போது பல சிக்கல்களும், கால தாமதமும் ஏற்படுகிறது. நண்பர்களிடம், உறவினர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியிருக்கிறேன் கவலை இல்லை என்று இருந்து விடாதீர்கள். விபத்தில் உயிர் பலியோ, பெரும்  சேதமோ, சட்ட விரோத செயல்கலுக்கோ உங்கள் வாகனம் பயன்பட்டால் முதலில்  ஏற்படும்  சிக்கல்கள் வாகன உரிமையாளர் பத்திரத்தில்(Registration Certificate - RC) உள்ள உரிமையாளருக்கு தான்  சட்ட சிக்கல்.  நீங்கள் வாகனத்தை விற்கும் பொழுது உங்கள் காப்பீட்டு நிறுவனத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிப்பது உங்களை  தேவையில்லாத மன உளைச்சலில் இருந்து காப்பற்றும்.     

5. நம்பகப் பிரச்சனைகள்

காப்பீடூ என்பது ஒரு ஒப்பந்தம். இழப்பீடு வரும் போது நமக்கு சிறந்த சேவை, குறைந்த நேரத்தில் கிடைக்க வேண்டும். இங்கே நிறைய சிக்கல்கள் வருகிறது.

 அதிக பட்ச வாகன மதிப்பு (Higher IDV), சரியான NCB, குறைந்த பட்ச  இழப்பீட்டு பிடித்த தொகையை (Lower Detectable) கொடுக்கும் நிறுவனமே சிறந்தது. சிறிது விலை அதிகம் இருந்தாலும், புகழ்ச்சிவுட்ர, சிறந்த நெறிமுறை கொண்ட, சேவை குறைவில்லா நிறுவனமே சிறந்தது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

16 ஆகஸ்ட், 2011

காப்பீடு - என் வாகனத்திற்கு மட்டும்!

காப்பீடு - நம்மை தழுவ வாய்ப்புள்ள  இடர்பாடுகளுக்கு எதிராக பொருளாதார பாதுகாப்பு அளிப்பது காப்பீடு.

ஒரு இடர் ஏற்படுவது உறுதியாகவும், அவ்விடர் எக்காலத்தில்  ஏற்படும் என்பது உறுதியற்றதாகவும் உள்ள ஒன்றிற்கு, காப்பீடு செய்யும் ஒப்பந்தம் காப்பீடுருதி எனப்படும்.

சில காப்பீடுகள் சட்ட படி  அவசியமாகவும் (உம் . வாகன காப்பீடு),  பல நாம் முடிவு செய்யவும் உள்ளது (உம் - ஆயுள் காப்பீடு, வீட்டுகாப்பீடு, மருத்துவ காப்பீடு )  

சொல்ல போனால் நாம் முடிவு செய்யும் காப்பீடுகள் மிகவும் அவசியமாகவும், நம் இடரை குறைக்கும் நண்பர்கள் போல உள்ளது.   நம் குடும்பத்தில் நடக்கும் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சையோ, குடும்ப தலைவரின் இறப்போ நம்மை சொல்லன்னா துயரத்தில் ஆழ்த் துவதும் அல்லாமல், பெரும்பாலும் நம்மை பொருளாதார சிக்கலில், கடும் நெருக்கடியில் தள்ளி விடுகிறது.

போலீஸ் பிடிப்பார்கள் -  வண்டிக்கு இன்சூரன்ஸ் எடு!!

நாமோ இன்சூரன்ஸ் என்பது ஏதோ தண்ட செலவு போல் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாத தகரத்தில் செய்த 5-10 Lakhs (லட்சம்) வாகனத்திற்கு வருடா வருடம் ரூபாய் 12,000 - 25,௦௦௦ வரை பிரீமியம்  (Premium) கட்ட தவறுவதில்லை.  சில ஆயிரம் செலவு செய்து ஆயுள் காப்பீடு செய்வதில்லை. 

  அதிகம் செலவு செய்துஆசை குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டடுவதில் தவறில்லை தான். ஆனால் நம்   திடீர் மரணம் நம் குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடாமல் இருக்க என்ன செய்தோம்?. கடினமாக வேலை செய்கிறோம். உயிருடன்  இருந்தால், சேமிப்பு குடும்பத்திற்கு தான். நல்ல சம்பளம்  என்று  60 Lakhs (லட்சங்கள்) வீடு தவணையில்; நண்பர்கள் வைத்துள்ளது போல் வாகனம் வாங்க வேண்டி, 8Lacs (லட்சத்தில்) தவணையில் வாங்கிய Car. அவசர தேவைக்கு(?) வாங்கிய பர்சனல் லோன்.  புதிய வரவு மொபைல், மற்றும் இந்த தள்ளுபடி, அந்த தள்ளுபடி, இறக்குமதி செய்யப்பட்ட அரிய(?) furnitures   வாங்கியதில் என்று கிரெடிட் கார்டு limit full.  என்ன செய்யமுடியும்.  அதையும் தவணையில் மாற்றியாகி விட்டது.

 நம்மிடம்  வாகனம் இல்லாமல் போனால் நாம்  சென்று வர ஆயிரம் வழிகள் உண்டு.  ஒரு கணம் நினைத்து பாருங்கள் - நாமே இல்லா விட்டால்?. 
நாம் வாங்கிய  கடனுக்காக கட்டிய/ வாங்கிய வீட்டை- வங்கி  கொண்டு போக, வாகனத்தை NBFC கொண்டு போக, மற்ற கடனுக்கு இருக்கும் நகை, சின்ன சின்ன பொருட்களை விற்று ......  எங்கே போக நம்மை நம்பியவர்கள். நம் குழந்தையின்  வெளி நாட்டு படிப்பு  கனவு, சிறப்பான திருமணம்.... என்னாகும்?. என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?.


பகுதி இரண்டு விரைவில்....

வளமாக வாழ சரியான பாதை!

நண்பர்களே,

வணக்கம்!

நிதிவள வலை பூங்கா தமிழில் தொடங்க முக்கிய நோக்கமே, தமிழ் வாழ் மக்களுக்கு நிதி சார்ந்த விழயங்களை பகிர்த்து கொள்ள தான்.




ஒரு பெருமையான விழயம். நம் நாட்டின் சராசரி சேமிப்பு 32.5%. அனைத்து நாடுகளும் நம்மை பார்த்து பிரமிகின்றன.  வளர்ந்த  நாடுகளின் சேமிப்பு அதல பாதாளத்தில்.  இரண்டு இலக்க எண்ணே அவர்களை பொறுத்தவரையில் எட்டா கனி.

ஆனால் நாம் ஏன் இன்னும் உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் இல்லை?. பணக்காரர்கள் மட்டும், பணம் சேர்த்து கொண்டே போக முடிகிறது . ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் எவ்வளவு சேமித்தாலும் ஏன் பணக்காரர்கள் ஆக முடியவில்லை?

SIMPLE : பணக்காரர்களின் பணம்,சரியாக நிர்வகிக்க படுகிறது. அவர்களின் பணம் அவர்களுக்காக வேலை செய்கிறது. நம் பணம் தூங்குகிறது.


சரி, வளமாக வாழ சரியான பாதை தான் என்ன?.  நடு தர மக்களாலும், பண சிக்கல் இல்லாமல் வாழ முடியுமா?             முடியும்.
 நிதி திட்டமிடல்   (Financial Planning) தான், அது . Yes. Financial Planning is the only Key.


கீழே உள்ள link  ஐ சொடுக்கவும்

12 ஆகஸ்ட், 2011

Gold is Old!!!

Dear Friends,

Right from my maid to HNI clients talking about ever increasing(?) gold prices and not to be missed sure multi-bagger investment potential. They perceive gold as a risk less investment.

Being started my financial industry in international commodity trading arena, I differ the above view and seeing trickling time bomb, all people want to stick around their neck.

Before getting into little technical, we must understand how we loose money at the time of buying gold itself. We Indians buy Physical gold that too as Jewellery, instead of Gold bars, ETF, collectibles...

worldwide, London is the central market to buy physical gold. London price is the base price and prices quoted in dollar.

International price of Gold is $ 1764 / 1Troy Ounces (31.1035 Grams)  and $,Re. conversion 
works out to Rs. 2540/gm. close maturity MCX rate is 2565/gm and Gold ETF rate is 2544.  But jewelers' rate is higher bet. 5-8% excluding vat. Eg. Famous leading Pr. Jewellery 24 cart rate is 2645.

Over and above the 5-8% margin on raw gold, 8 - 20% making and wastage charges on gold value, 5% liquidation charges (wastage and melting charges while selling/Exchange) and doubtful quality. Isn't it equivalent to your So called investment-cum- insurance (ULIP) products. Highest entry charges and exit charges.

So if you buy gold at 2500 per gram, effective cost runs to 2875 (15% charge  - minimum side). If you want to profit out of jewels,  your cost including Min. 5% melting charge goes to Rs.3000/gram (24,000 per sovereign) against present cost of Rs.20,000 per sovereign.

Again their is a threat of burglary, robbery, theft .... By all means we are not buying insurance also. Why gold, we not even insuring, our dream home which is one's major  life time saving/EMI . Any way you are not going to wear all jewels.  Have reasonable quantity.

Can you imagine initial cost of 15-20% and 5% for liquidity -  even worst pledging for liquidity (interest rate) and FALL OF 20-30% of actual gold rate. Any internationally traded commodity falls based on  fundamental news and Technical.  

There is a interesting fact. International Gold prices crossed $500/troy ounce in 1979 at the time of great gulf crisis. Then fallen dramatically later. It again crossed 500/troy ounce only in late 2005. from 2006 till date gold appreciated more than 350%. It probably a sign of bubble. It is rising only on fundamental news. Then how come we Indians not felt Gold's stagnation from 80's. SIMPLE. Our conversion rate was Rs.8 against present Rs.45 with USD. Steady rise mainly because of Re. weakness. If we believe India going to be super power, obviously our Forex rate will stabilize if and gaining against Dollar.

Investing in gold in the form of jewellery is not wise. In fact, it is probably the worst way to invest in gold due to the reasons discussed above.You invest in Gold ETF, when you want to make jewellery liquidate gold ETF. Till date, let that 15-20% initial cost of jewellery also grow.


Happy Investing - Let our money Grow.












8 ஆகஸ்ட், 2011

உடல் நலம் காக்கும் ஆரோக்கிய உணவு - அன்னாசி பழம்

என்னடா இது,
நிதி வளத்தில் உடல் நலம் பற்றிய பதிவு என்று ஆச்ரியமா? . சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?.

 வீட்டை கட்டி பார். கல்யாணம் பண்ணி பார் என்பது போல் ஆஸ்பத்திரிக்கு போய் பார் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே வருகிறது. வருடா வருடம் சுமார் 20%  செலவு அதிகரிக்குது. 

Obesity  (உடல் பருமன்), Digestion (செரிமான) கோளாறுகள் நாள் தோரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

உடல் நலம் காக்கும் ஆரோக்கிய உணவு :


அன்னாசி பழமும். எடை குறைப்பும்


உடல் நலம் காக்கும் உணவுப் பொருட்களில் காய் கறிகள் பழங்கள் பங்கு அதிகமாகும். பொதுவாக எல்லா பழங்களுமே நல்லது தான். எவ்வளவு அதிகமாக பழங்களை சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் நோய எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் கூடும். சில பழங்கள் மருந்து போலவே செயல்படும்.


அன்னாசி பழம் ஒரு மருந்தாக


அன்னாசி ஒரு மருந்து போ செயல்பட்டு உடல் நலம் காக்கும் ஒரு பழமாகும் இந்த பழத்தில் வைட்டமின் பி சத்து அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி வைட்டமின் சத்துக்களும் உள்ளது. கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. பழங்களைப் போல கொட்டைபப் பிரச்சினை இல்லை. மேல்


தோலையும் நீக்கிவிட்டால் அருமையான சதை பகுதி மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். மத்தியில் தண்டு போன்ற பகுதியும் நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த கலவையை விரும்பி சாப்பிடுகிறவர்களும் உண்டு, விரும்பாதவர்களும் உண்டு.


ஜீரண சக்திக்கு


அன்னாசி பழம் ஒரு சில துண்டுகள் மட்டுமே சாப்பிட முடியும், அதிகமாக சாப்பிடமுடியாது என்றாலும் அந்த ஒரு சில துண்டுகளே நல்ல ஜீரண சக்தியை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பாடிற்கு பின் சாப்பிடுவது நல்லது. அன்னாசி பழத்துண்டுகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து சாப்பிடலாம் ௧00 மில்லி தண்ணீரை சேர்த்து அரைத்து சாறு எடுக்க வேண்டும். சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடலாம். இரு உணவு நேரத்திற்கு இடையிலும் பயன்படுத்தலாம்.