நண்பர் இரவில் வேலை முடித்து வீடு திரும்பும் போது குறுக்கே வந்த சைக்கிள்காரனைத் தவிர்க்க மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்ததில் சறுக்கி கீழே விழுந்தார். காலில் சரியான அடி. முதலுதவி எடுத்துக் கொண்டு சற்று பெரிய எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனைக்கு சென்றார். இடது கால் முட்டிக்கு சற்று கீழே எலும்பு முறிவு ஏற்பட்டதால் உலோகப்பட்டி வைத்து சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாள் கழித்து மருத்துவர் பேசிக்கொண்டிருந்த போது நடராஜிடம், அவர் பணமாகக் கட்டியிருந்தால் ஒரு லட்சது இருபது ஆயிரம் தான் ஆயிருக்கும் என்றார். மருத்துவக் காப்பீடு என்பதால் பில் இரண்டு லட்சம் ரூபாயானது. நடராஜ் வேலை பார்க்கும் நிறுவனம் காப்பீடு செய்திருந்ததால் அவர் பணம் ஏதும் கட்ட வேண்டி இருக்காது என்று நினைத்தார் நண்பர்.
ஆனால் சோதனை விடவில்லை. அந்த பாலிசியின்படி கோ பேமெண்ட் 20% நடராஜ் கட்ட வேண்டும்.அதாவது அனுமதிக்க பட்ட எந்த மருத்துவச் செலவானாலும் அதில் 20%த்தை காப்பீடு எடுத்தவர் கட்டவேண்டும். 8௦% (எண்பது சதவிகித) பணம் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் .
இங்கே நடராஜ் செலுத்திய தொகை ரூ. 40,000/- ( இரண்டு லட்சத்திற்கு 20% ) இவரே பணமாகச் செலுத்திருந்தால் டாக்டர் சொன்னபடி ரூபாய் ஒரு லட்சது இருபது ஆயிரம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால், நடராஜ் தனது கோ-பேமன்ட்டாகச் ரூ,. 24000 மட்டுமே செலுத்திருப்பார். அதாவது முதலிலேயே இவர் பணதைகட்டி மருத்துவம் எடுத்திருந்தால் செலவு ,ரூ. 12௦,000 (டாக்டர் சொன்னபடி பல மருத்துவ மனைகளில் நடப்பது தான்) ஆகியிருக்கும்.
இவர் காப்பீடு நிறுவனத்தில் இழப்பு கோரும்போது அவர்கள் ரூ 96000 இழப்பீடு அளித்திருப்பார்கள். ரூ 120000-24000 (மருத்துவமனை செலவு - கோ பேமன்ட்). கேஸ் லெஸ் (!) வசதியால், நடராஜிக்கு ஏற்பட்ட இழப்பு , ரூ 16000 /-. மேலும் அவருடைய காப்பீடு தொகை மீதமூம் 8௦௦௦௦ குறைந்து விட்டது.
அதை தொடர்ந்து வந்த சில உடல் நல குறைவுக்கு காப்பீஇடு நிறுவனம் பணம் தர மறுத்து விட்டது. (Reason : Pre - Existing)
இதை என் நிதி ஆலோசகரிடம் பேசும் போது, மருத்துவ காப்பீடில் உள்ள பல விசயங்களை பற்றி சொன்னார். அதை பற்றி விரைவில்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக