8 ஆகஸ்ட், 2011

வரவு எட்டணா, செலவு பத்தணா

வரவு எட்டணா, செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தனா, துந்தனா...

இது நமக்கு என்றே பாடிய பாடல் போலவே இருக்கு தானே?

இதன் நேரடி பொருள் நமக்கு புரியும். சேமிப்பு ரொம்ப முக்கியம். சிலர், தான் போதுமான அளவு சேமிப்பதாக நினைகிறார்கள். உங்கள் சிந்தனைக்கு இதோ மேலும் சில.....

கடன் வாங்குவது எத்தனை சதவிகிதத்தில் ?
கல்வி கடன் - 12.5 - 16%
வீடு கடன் - 8.5 -11%
பர்சனல் லோன்( ?) - 18 - 36%
நகை கடன் 11 -24%
வாகனம் வாங்க (வெகீகள்) கடன்
கிரிடிட் கார்டு லோன்
ஆபீஸ் சாப்ட் லோன்
கை லோன்   ..... மூச்சு முட்டுது


கொஞ்ச நஞ்ச சேமிப்பும், பேங்க் டெபாசிட், கம்பனி டெபாசிட், சீட்டு என்று 10 % வரை வருமானமுள்ள சேமிப்பு மட்டுமே. அதிலும் வருமான வரி கட்ட வேண்டும். என்ன தான் செய்வது?. 

சேமிப்பு என்பது வேறு, முதலீடு (Investment) என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளாதவரை, கஷ்டம் தான்.

 CASA - Current Account & Savings Account. நம்முடைய சேமிப்பு கணக்கு(SB) மற்றும் நடப்பு கணக்கு (CA). மொத்த வங்கி டிபோசிட்க்கும் CASA கும்  விகிதாசாரம்  (Ratio) வங்கியின் முக்கிய வருமான வழி.
Axis Bank Ltd has the CASA, @ 46%, 
HDFC Bank Ltd, @ 44.4%. 
State Bank of India  @ (43.57%)
Central Bank of India (42.09%). 
Bank of Maharashtra (43.16%) and 
United Bank of India (42%).... இது 2007 - 09 கால data.

எப்படி? 
சேமிப்பு கணக்கு(SB) - வட்டி 4 %
மற்றும் நடப்பு கணக்கு (CA) - வட்டி இல்லை. 

கிட்ட தட்ட நம்மிடமிருந்து சும்மா பணம் வாங்கி, நமக்கே அதிக வட்டிக்கு கடன் கொடுக்குது நம் வங்கிகள். நாமளும் நம் பணம் வங்கியில் பாதுகாப்பாக உள்ளதாக மகிழ்ச்சி கொள்கிறோம். நம் பணத்தில் வங்கிகள் லாபம் அடைகின்றன. 

கடன்  இல்லா விட்டாலும்,  சேமிப்பு என்ற பெயரில், நாம் நமக்கே கெடுதல் செய்து கொள்கிறோம். பண வீக்கம் 7 % , நம் சேமிப்போ அதற்கு குறைவான வளர்ச்சியில். என்ன செய்யலாம்?

தொடர்ச்சி விரைவில் ....

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக