என்னடா இது,
நிதி வளத்தில் உடல் நலம் பற்றிய பதிவு என்று ஆச்ரியமா? . சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?.
வீட்டை கட்டி பார். கல்யாணம் பண்ணி பார் என்பது போல் ஆஸ்பத்திரிக்கு போய் பார் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே வருகிறது. வருடா வருடம் சுமார் 20% செலவு அதிகரிக்குது.
Obesity (உடல் பருமன்), Digestion (செரிமான) கோளாறுகள் நாள் தோரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
உடல் நலம் காக்கும் ஆரோக்கிய உணவு :
அன்னாசி பழமும். எடை குறைப்பும்
உடல் நலம் காக்கும் உணவுப் பொருட்களில் காய் கறிகள் பழங்கள் பங்கு அதிகமாகும். பொதுவாக எல்லா பழங்களுமே நல்லது தான். எவ்வளவு அதிகமாக பழங்களை சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் நோய எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் கூடும். சில பழங்கள் மருந்து போலவே செயல்படும்.
அன்னாசி பழம் ஒரு மருந்தாக
அன்னாசி ஒரு மருந்து போல செயல்பட்டு உடல் நலம் காக்கும் ஒரு பழமாகும் இந்த பழத்தில் வைட்டமின் பி சத்து அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி வைட்டமின் ஏ சத்துக்களும் உள்ளது. கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. பழங்களைப் போல கொட்டைபப் பிரச்சினை இல்லை. மேல்
தோலையும் நீக்கிவிட்டால் அருமையான சதை பகுதி மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். மத்தியில் தண்டு போன்ற பகுதியும் நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த கலவையை விரும்பி சாப்பிடுகிறவர்களும் உண்டு, விரும்பாதவர்களும் உண்டு.
ஜீரண சக்திக்கு
அன்னாசி பழம் ஒரு சில துண்டுகள் மட்டுமே சாப்பிட முடியும், அதிகமாக சாப்பிடமுடியாது என்றாலும் அந்த ஒரு சில துண்டுகளே நல்ல ஜீரண சக்தியை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பாடிற்கு பின் சாப்பிடுவது நல்லது. அன்னாசி பழத்துண்டுகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து சாப்பிடலாம் ௧00 மில்லி தண்ணீரை சேர்த்து அரைத்து சாறு எடுக்க வேண்டும். சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடலாம். இரு உணவு நேரத்திற்கு இடையிலும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக