காப்பீடு - நம்மை தழுவ வாய்ப்புள்ள இடர்பாடுகளுக்கு எதிராக பொருளாதார பாதுகாப்பு அளிப்பது காப்பீடு.
ஒரு இடர் ஏற்படுவது உறுதியாகவும், அவ்விடர் எக்காலத்தில் ஏற்படும் என்பது உறுதியற்றதாகவும் உள்ள ஒன்றிற்கு, காப்பீடு செய்யும் ஒப்பந்தம் காப்பீடுருதி எனப்படும்.
சில காப்பீடுகள் சட்ட படி அவசியமாகவும் (உம் . வாகன காப்பீடு), பல நாம் முடிவு செய்யவும் உள்ளது (உம் - ஆயுள் காப்பீடு, வீட்டுகாப்பீடு, மருத்துவ காப்பீடு ).
சொல்ல போனால் நாம் முடிவு செய்யும் காப்பீடுகள் மிகவும் அவசியமாகவும், நம் இடரை குறைக்கும் நண்பர்கள் போல உள்ளது. நம் குடும்பத்தில் நடக்கும் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சையோ, குடும்ப தலைவரின் இறப்போ நம்மை சொல்லன்னா துயரத்தில் ஆழ்த் துவதும் அல்லாமல், பெரும்பாலும் நம்மை பொருளாதார சிக்கலில், கடும் நெருக்கடியில் தள்ளி விடுகிறது.
![]() |
| போலீஸ் பிடிப்பார்கள் - வண்டிக்கு இன்சூரன்ஸ் எடு!! |
நாமோ இன்சூரன்ஸ் என்பது ஏதோ தண்ட செலவு போல் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாத தகரத்தில் செய்த 5-10 Lakhs (லட்சம்) வாகனத்திற்கு வருடா வருடம் ரூபாய் 12,000 - 25,௦௦௦ வரை பிரீமியம் (Premium) கட்ட தவறுவதில்லை. சில ஆயிரம் செலவு செய்து ஆயுள் காப்பீடு செய்வதில்லை.
அதிகம் செலவு செய்துஆசை குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டடுவதில் தவறில்லை தான். ஆனால் நம் திடீர் மரணம் நம் குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடாமல் இருக்க என்ன செய்தோம்?. கடினமாக வேலை செய்கிறோம். உயிருடன் இருந்தால், சேமிப்பு குடும்பத்திற்கு தான். நல்ல சம்பளம் என்று 60 Lakhs (லட்சங்கள்) வீடு தவணையில்; நண்பர்கள் வைத்துள்ளது போல் வாகனம் வாங்க வேண்டி, 8Lacs (லட்சத்தில்) தவணையில் வாங்கிய Car. அவசர தேவைக்கு(?) வாங்கிய பர்சனல் லோன். புதிய வரவு மொபைல், மற்றும் இந்த தள்ளுபடி, அந்த தள்ளுபடி, இறக்குமதி செய்யப்பட்ட அரிய(?) furnitures வாங்கியதில் என்று கிரெடிட் கார்டு limit full. என்ன செய்யமுடியும். அதையும் தவணையில் மாற்றியாகி விட்டது.
நம்மிடம் வாகனம் இல்லாமல் போனால் நாம் சென்று வர ஆயிரம் வழிகள் உண்டு. ஒரு கணம் நினைத்து பாருங்கள் - நாமே இல்லா விட்டால்?.
நாம் வாங்கிய கடனுக்காக கட்டிய/ வாங்கிய வீட்டை- வங்கி கொண்டு போக, வாகனத்தை NBFC கொண்டு போக, மற்ற கடனுக்கு இருக்கும் நகை, சின்ன சின்ன பொருட்களை விற்று ...... எங்கே போக நம்மை நம்பியவர்கள். நம் குழந்தையின் வெளி நாட்டு படிப்பு கனவு, சிறப்பான திருமணம்.... என்னாகும்?. என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?.
நாம் வாங்கிய கடனுக்காக கட்டிய/ வாங்கிய வீட்டை- வங்கி கொண்டு போக, வாகனத்தை NBFC கொண்டு போக, மற்ற கடனுக்கு இருக்கும் நகை, சின்ன சின்ன பொருட்களை விற்று ...... எங்கே போக நம்மை நம்பியவர்கள். நம் குழந்தையின் வெளி நாட்டு படிப்பு கனவு, சிறப்பான திருமணம்.... என்னாகும்?. என்றாவது யோசித்து பார்த்தது உண்டா?.
பகுதி இரண்டு விரைவில்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக